by Staff Writer 29-06-2021 | 4:31 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவுக்கு (Jacob Zuma) 15 மாத சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த ஜேக்கப் ஸூமாவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயங்களில் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து சதிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு ஒரு தடவை மாத்திரம் முன்னிலையாகிய முன்னாள் ஜனாதிபதி அடுத்தடுத்த தவணைகளில் முன்னிலையாகவில்லை.