பூண்டுலோயாவில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை 

பூண்டுலோயாவில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை 

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2021 | 4:45 pm

Colombo (News 1st) பூண்டுலோயா – சீன் தோட்டத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்குடியிருப்பில் வசித்த 47 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

கணவர் கொழும்பில் தொழில்புரிந்துவரும் நிலையில் தனது பிள்ளைகளுடன் குறித்த பெண் வசித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொலை தொடர்பில் அதே தோட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்