தடுப்பூசி திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெற அமைச்சரவை அனுமதி 

தடுப்பூசி திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெற அமைச்சரவை அனுமதி 

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2021 | 1:36 pm

Colombo (News 1st) COVID – 19 தடுப்பூசி திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மீட்பு பதிலளிப்பு கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் கருத்திட்டத்திற்கான மொத்த செலவு 161.85 மில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 11.85 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிக்கான பங்களிப்பை இலங்கை அரசாங்கம் வழங்குகின்றது.

தடுப்பூசி ஏற்றுதற்கான செலவுகள், கண்காணிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல், குளிரூட்டிகளுடன் கூடிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் சிகிச்சை கழிவகற்றல் முகாமைத்துவத்தை பலப்படுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக கடனை பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்