இன்று (29) காலை முடக்கப்பட்ட பிரதேசங்கள்

இன்று (29) காலை முடக்கப்பட்ட பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 29-06-2021 | 1:48 PM
Colombo (News 1st) கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று (29) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவையாளர் பிரிவின் சங்ஹிந்த செவண தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொரளை 100 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நுவரெலியா, கம்பஹா, காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 11 பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் புதிய வளத்தாப்பிட்டி கிராமம், மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின், மீராவோடை கிழக்கு 207, மீராவோடை மேற்கு 207 B, மாஞ்சோலை பதுரிய 207 B கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை களுதமத, ஹப்புகஸ்தலாவ, வீரபுர மற்றும் கீழ்  கொறக்க ஓய கிராம சேவையாளர் பிரிவுகளும் பியகம பொலிஸ் பிரிவின் சில பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.