தடுப்பூசிக்காக காலி சென்றவர்கள் தொடர்பில் தகவல்

AstraZeneca இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள  425 பேர் மேல் மாகாணத்தில் இருந்து காலி சென்றமை தெரியவந்துள்ளது 

by Staff Writer 27-06-2021 | 3:58 PM
Colombo (News 1st) காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் ஜூன் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் AstraZeneca இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களில் 425 பேர் மேல் மாகாணத்தில் இருந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. காலி நீதவானின் உத்தரவிற்கமைய, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் காலி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியல் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த இரு நாட்களிலும் மொத்தமாக 632 பேருக்கு AstraZeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் நுவரெலியாவை சேர்ந்த ஒருவரும் கண்டியை சேர்ந்த ஒருவரும் மாத்தறையை சேர்ந்த இருவரும் எல்பிட்டியவை சேர்ந்த 27 பேரும் காலியை சேர்ந்த 90 பேரும் பொலிஸ் அதிகாரிகள் 79 பேரும் அடங்குகின்றனர். கடந்த 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் Covishield தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வதற்காக மேல் மாகாணத்திலிருந்து பெருமளவானோர் தெற்கு அதிவேக வீதியூடாக வாகனங்களில் பயணித்துள்ளனர். இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய, காலி பிராந்திய குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது, நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கமைய இந்த அறிக்கை பெறப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்