தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்படவுள்ளது

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளை (28) மூடப்படவுள்ளது

by Staff Writer 27-06-2021 | 1:59 PM
Colombo (News 1st) தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் நாளை (28) மூடப்படவுள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் எதிர்வரும் 29 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் வர்த்தக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.