இலங்கை தமிழர்களுக்கு உதவிய கார்த்திக் சுப்புராஜ்

இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கார்த்திக் சுப்புராஜ்

by Bella Dalima 27-06-2021 | 4:40 PM
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஆனையூர் எனும் பகுதியில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சுமார் 800 இலங்கை தமிழர்களுக்கு 3 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அவர் வழங்கியுள்ளார். அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கியுள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரானார். தற்போது விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார்.