பிரித்தானியாவின் புதிய சுகாதார அமைச்சராக சஜிட் ஜாவிட் நியமனம்

பிரித்தானியாவின் புதிய சுகாதார அமைச்சராக சஜிட் ஜாவிட் நியமனம்

பிரித்தானியாவின் புதிய சுகாதார அமைச்சராக சஜிட் ஜாவிட் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jun, 2021 | 2:46 pm

Colombo (News 1st) பிரித்தானியாவின் புதிய சுகாதார அமைச்சராக முன்னாள் நிதி அமைச்சர் சஜிட் ஜாவிட் (Sajid Javid) நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வேண்டுகோளுக்கு இணங்க, தமது அரசியல் ஆலோசகர்களை பணி நீக்கம் செய்ய மறுப்பு தெரிவித்த சஜிட் ஜாவிட் கடந்த வருடத்தில் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார்.

கொரோனா விதிமுறைகளை மீறியமை தொடர்பிலான புகைப்படங்கள் வௌியாகியதை தொடர்ந்து பிரித்தானிய சுகாதார அமைச்சர் மெட் ஹென்கொக் (Matt Hancock) தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சஜிட் ஜாவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்