திடீர் சுற்றிவளைப்பு: ஆயுதங்களுடன் ஐவர் கைது

திடீர் சுற்றிவளைப்பு: ஆயுதங்களுடன் ஐவர் கைது

திடீர் சுற்றிவளைப்பு: ஆயுதங்களுடன் ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2021 | 2:06 pm

Colombo (News 1st) கல்கிசை, கல்கமுவ மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அங்குலான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், கைக்குண்டு மற்றும் 10 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

49, 47 மற்றும் 21 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, கல்கமுவ பகுதியில் 40 வயதுடைய ஒருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இரத்தினபுரி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்