டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை: செரீனா வில்லியம்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை: செரீனா வில்லியம்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை: செரீனா வில்லியம்ஸ்

எழுத்தாளர் Bella Dalima

27 Jun, 2021 | 7:03 pm

Colombo (News 1st) டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

தாம் ஒலிம்பிக் பட்டியலில் இல்லையெனவும் அது தமக்குத் தெரியாத நிலையில், தாம் அதில் கலந்துகொள்வது முறையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரது முடிவு குறித்து விபரமாக வினவ முற்பட்ட போது, அது குறித்து பேச செரீனா வில்லியம்ஸ் விரும்பவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

போட்டி விதிமுறைகளுக்கு அமைய, தமது 3 வயது குழந்தையை அழைத்துச் செல்ல முடியாதென்பதால், தாம் டோக்கியோவிற்கு செல்லப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகம் பெற்ற அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான 39 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை நான்கு தடவைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

23 கிரான்ட்ஸ்லாம் பட்டங்களையும் அவர் வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்