English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
27 Jun, 2021 | 8:49 pm
Colombo (News 1st) கண்டி – பலகொல்ல பிரதேசத்தில் இருவரைக் கடத்தி, கைகளில் ஆணி அடித்து மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைக்குள்ளாக்கிய நபர்களைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்தன்ன – தலுகொல்ல பகுதியிலுள்ள மலை உச்சிக்கு இருவர் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் மீட்கப்பட்ட இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2.30-க்கு பலகொல்ல பிரதேசத்தில் வைத்து இவர்கள் கடத்தப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட இருவரும் அம்பிட்டிய பிரதேசத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர் பலகொல்ல பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றை நடத்தி வந்த 30 வயதானவர் என தெரியவந்துள்ளது.
சித்திரவதைக்குள்ளான இருவரும் தேவாலயங்களுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டமையால் ஆத்திரமடைந்த குறித்த நபர், அவர்களை தமது வீட்டிற்கு அழைத்து, பின்னர் அம்பிட்டியவில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, சிலுவையில் அறைவதைப் போன்று ஆணிகள் அடித்து சித்திரவதை செய்தமை தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹனதெரிவித்தார்.
22 Feb, 2022 | 06:08 PM
03 Dec, 2021 | 08:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS