இன்று (27) காலை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

இன்று (27) காலை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

இன்று (27) காலை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

எழுத்தாளர் Staff Writer

27 Jun, 2021 | 2:00 pm

Colombo (News 1st) கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (27) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் தலங்கம பொலிஸ் பிரிவின் தலாஹேன தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜய மாவத்தை மற்றும் ஜயகத் மாவத்தை என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தலஹேன வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஜயகத் மாவத்தை, சத்சர மாவத்தை, இசுரு மாவத்தை, சமனல மாவத்தை மற்றும் தபாலக சந்தி என்பன இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தின் கஹங்கம கொஸ்கலவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் போபத்த வசம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயலணி அறிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவின் கட்டபூலா மத்திய பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்