துறைமுக நகர் சட்டமூலம்: விசாரணை அறிக்கை கையளிப்பு

துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு: விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

by Staff Writer 26-06-2021 | 10:22 AM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லையென முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் அடங்கியுள்ள பரிந்துரைகள் தொடர்பில் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். குறித்த வாக்கெடுப்பின் போது, வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அந்த கடிதத்தினூடாக கோரப்பட்டிருந்தது. இதற்கமைய, சபாநாயகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஓய்வு பெற்ற பாராளுமன்ற பொதுச்செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஏனைய செய்திகள்