சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க 2 விசேட பிரிவுகள் 

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் 2 விசேட பிரிவுகள் ஸ்தாபிப்பு

by Staff Writer 26-06-2021 | 10:29 AM
Colombo (News 1st) சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் 2 விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபான உற்பத்தி, மணல் அகழ்வு, அனுமதியின்றி மாணிக்கக்கல் அகழ்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக இந்த விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நீரியல் சுற்றிவளைப்புப் பிரிவொன்றும் ட்ரோன் விசேட சுற்றிவளைப்பு பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. விசேட நீரியல் சுற்றிவளைப்புப் பிரிவினூடாக களனி, களு, நில்வளா, மகாவலி மற்றும் வளவை கங்கை உள்ளிட்ட பிரதான கங்கைகளை அண்மித்து விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த பிரிவிற்கு தேவையான மோட்டார் படகு, மின் படகு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்யவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்தது. ட்ரோன் விசேட சுற்றிவளைப்பு பிரிவினூடாக சட்டவிரோத மதுபான உற்பத்தி நடைபெறும் இடங்கள் சுற்றிவளைக்கப்படவுள்ளன.