நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம்

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம்

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம்

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2021 | 10:09 am

Colombo (News 1st) நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனூடாக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என
சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள், சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

இதற்கான அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை இரண்டு வாரங்களில் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 5,000 முதல் 25,000 ரூபாவிற்குள்ளேயே அபராதம் விதிக்கப்படுவதால், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் எவ்வித அச்சமுமின்றி தவறிழைப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நுகர்வோரின் நலன் கருதியே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்