நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் பிணையில் விடுவிப்பு

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் பிணையில் விடுவிப்பு

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2021 | 2:36 pm

Colombo (News 1st) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சந்தேகநபரை இன்று பிற்பகல் கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி சில்வா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, பிணை வழங்கப்பட்டுள்ளது.

AstraZeneca தடுப்பூசி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கருத்து தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய அசேல சம்பத் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் பிலியந்தலை பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து அசேல சம்பத்தை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்