திஸ்ஸமஹாராம வாவி புனரமைப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவிப்பு

திஸ்ஸமஹாராம வாவி புனரமைப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவிப்பு

திஸ்ஸமஹாராம வாவி புனரமைப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2021 | 4:20 pm

Colombo (News 1st) திஸ்ஸமஹாராம வாவியில் சீன – இலங்கை கூட்டு நிறுவனம் முன்னெடுக்கும் சேற்று மண்ணை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமது அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் வரை இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் மதிப்பீடு செய்து வாவிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்பு இந்தப் பணிகளை முன்னெடுப்பதா அல்லது மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என தொல்பொருள் திணைக்களம் உத்தேசிக்கும் என்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்