by Staff Writer 26-06-2021 | 11:24 AM
Colombo (News 1st) தங்காலை - நாக்குலுகமுவ பகுதியில் வீடொன்றின் வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 13 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வலஸ்கல சுபுன் என அழைக்கப்படும் சுபுன் புத்திகவின் வீட்டின் பின்புற காணியிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுபுன் புத்திக, 2018 ஆம் ஆண்டில் குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன், துப்பாக்கி பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியே புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.