கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுமார் 10,000 பேருக்கு தொற்று

கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுமார் 10,000 பேருக்கு தொற்று

கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுமார் 10,000 பேருக்கு தொற்று

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2021 | 11:42 am

Colombo (News 1st) கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் 211 கொரோனா நோயாளர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் A.R.M. தௌபீக் தெரிவித்துள்ளார்.

இன்று (26) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை 2,49,926 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 2,14,668 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

32,444 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, நாட்டில் 2,862 பேர் கொரொனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்