ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொதிகளுக்கு  VAT வரி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொதிகளுக்கு  VAT வரி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொதிகளுக்கு  VAT வரி

எழுத்தாளர் Staff Writer

26 Jun, 2021 | 2:08 pm

Colombo (News 1st) ஜூலை முதலாம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும் 150 யூரோவிற்கும் அதிக பெறுமதியுடைய அனைத்து தபால் பொதிகளும் ஐரோப்பிய VAT வரிக் கொள்கைக்கு உட்படுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வரிக் கொள்கையில் கடிதங்கள் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும் பரிசுப் பொருட்களும் இந்த ஐரோப்பிய VAT வரிக் கொள்கைக்கு உட்படுவதாக தபால் திணைக்களம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு தபால் பொதியும் தபால் அனுப்பப்படும் இடம், VAT வரிக் கொள்கை மற்றும் ஏனைய கட்டணக் கொள்கைகளுக்கு உட்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தங்களின் பிரகாரம் அனுப்பப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்