by Bella Dalima 25-06-2021 | 11:59 AM
Colombo (News 1st) சேதன மற்றும் இரசாயன உரங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
உள்ளூர் விவசாயிகள் சேதன உர உற்பத்தியில் கவனம் செலுத்துவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி M.W.வீரக்கோன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டிற்கு தேவையான சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.