நீர்கொழும்பில் வர்த்தகர் கொலை: மனைவியும் மற்றுமொரு நபரும் கைது

நீர்கொழும்பில் வர்த்தகர் கொலை: மனைவியும் மற்றுமொரு நபரும் கைது

நீர்கொழும்பில் வர்த்தகர் கொலை: மனைவியும் மற்றுமொரு நபரும் கைது

எழுத்தாளர் Bella Dalima

25 Jun, 2021 | 12:36 pm

Colombo (News 1st) நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரின் மனைவியும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகரின் சடலத்தை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி குறித்த வர்த்தகர் கொலை செய்யப்பட்டார்.

வர்த்தகரின் பூதவுடல் நீர்கொழும்பு – போலவலான பகுதியிலுள்ள மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்