24 மணித்தியாலங்களில் 743 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட மீறல்: 24 மணித்தியாலங்களில் 743 பேர் கைது

by Bella Dalima 25-06-2021 | 10:26 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 743 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டி பகுதியிலேயே பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதனைத் தவிர, மாத்தளையில் 78 பேரும் கண்டியில் 66 பேரும் புத்தளத்தில் 50 பேரும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. முகக்கவசம் அணியத் தவறுவோர் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதனால் தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.