ஜனாதிபதியின் பொசன் பூரணை தின செய்தி

தச ராஜ தர்ம கோட்பாட்டினை முன்னுதாரணமாகக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 24-06-2021 | 7:30 PM
Colombo (News 1st) சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப புத்த பகவானின் போதனைகளையும் தச ராஜ தர்மக் கோட்பாட்டினையும் அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையை தமது நிர்வாகம் முன்னுதாரணமாகக் கொள்ளும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார். நிலம், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் தொடர்பில் சிந்திக்கும் பிரஜைகளாகவே மக்களை மையமாகக் கொண்ட பொருளாதார இலக்கை அடையவும் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்பவும் வேண்டும் என ஜனாதிபதி பொசன் பூரணை தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மனிதநேயம், கருணை, சமத்துவம் ஆகியவற்றை மிகிந்து தேரரின் வருகை மெருகூட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள பொசன் தின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கைக்கு மிகவும் நெருக்கமான மூன்று காலத்திற்கும் பொருந்தும் வகையில் பௌத்த தர்மம் அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.