ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2021 | 9:51 am

Colombo (News 1st) கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 21 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 25 வயதான யுவதியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிரேண்ட்பாஸில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் 59 வயதான பெண்ணொருவர் 14 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து 291,200 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்