உ/த பெறுபேறு மீளாய்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல் 

உ/த பெறுபேறு மீளாய்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல் 

உ/த பெறுபேறு மீளாய்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல் 

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2021 | 9:01 am

Colombo (News 1st) 2020 கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை Online ஊடாக மாத்திரம் கோருவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனம் பி பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www. doenets.lk எனும் முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை பாடசாலை அதிபரின் சான்றுப்படுத்தல் மற்றும் கையொப்பம் என்பன தேவையில்லை எனவும் ஆணையாளர் நாயகம் சனம் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்