மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

by Chandrasekaram Chandravadani 23-06-2021 | 8:23 AM
Colombo (News 1st) திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களின் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகள் இன்று (22) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகராஜ வலவ்வ பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலாம் குறுக்குத்தெரு, பிறைந்துறைச்சேனை 206C மற்றும் இரண்டாம் குறுக்குத்தெரு பிறைந்துறைச்சேனை 206C ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவைதவிர, காத்தான்குடி பொலிஸ் பிரவின் கீழுள்ள  8 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (22) கொரோனா மரணமொன்று பதிவாகியதுடன், 178 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் கூறினார்.