இதுவரை 88 கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன

இதுவரை 88 கடலாமைகளும் ஒரு திமிங்கிலமும் 7 டொல்பின்களும் கரையொதுங்கியுள்ளன

by Staff Writer 23-06-2021 | 8:34 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இறந்த நிலையில் 7 கடலாமைகள் கரையொதுங்கின. இன்று (23) காலை மொரட்டுவை - லுனாவ பகுதியில் ஒரு கடலாமை கரையொதுங்கியதுடன், பகல் வேளையில் முரவத்த பகுதியில் மற்றுமொரு கடலாமையின் உடல் கரையொதுங்கியது. களுத்துறை வடக்கு பகுதியிலும் காலி - கொஸ்கொட, நாபே பகுதியிலும் கடலாமைகள் இறந்துள்ளன. இதேவேளை, ஹிங்கடுவையில் இன்று இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கின. நாரா நிறுவன அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். கல்முனை - பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இன்று டொல்பின் கரையொதுங்கியுள்ளது. முந்தல் - சின்னப்பாடு கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடலமை கரையொதுங்கியுள்ளது. MV X-Press Pearl கப்பல் தீப்பற்றியதில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மாதம் முதல் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இதுவரையான காலப்பகுதில் சுமார் 88 கடலாமைகளும் ஒரு திமிங்கிலமும் 7 டொல்பின்களும் இறந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கரையொதுங்கியுள்ளன.