by Chandrasekaram Chandravadani 23-06-2021 | 2:32 PM
Colombo (News 1st) யாழ். வடமராட்சி, நெல்லியடி - கரவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் திக்கம் அல்வாயைச் சேர்ந்த 32 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அல்வாயிலிருந்து நெல்லியடி நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் மோட்டார்சைக்கிள் ஓட்டுனரே உயிரிழந்ததுடன், சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.