தபால் திணைக்களத்திற்கு அதிக நாளாந்த வருமானம் 

தபால் திணைக்களத்திற்கு அதிக நாளாந்த வருமானம் 

by Staff Writer 23-06-2021 | 9:01 AM
Colombo (News 1st) தபால் திணைக்களம் நேற்று (22) அதிக நாளாந்த வருமானத்தை ஈட்டியுள்ளது. 28 கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் நேற்று ஈட்டப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். மின்கட்டணப் பட்டியல் மூலம் 22 கோடி ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தவிர கடந்த 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திற்கு 22 கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் கிடைத்ததாக தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மின்சார சபை, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உள்ளிட்ட 18 நிறுவனங்களின் பட்டியல்கள் மூலம் தபால் திணைக்களம் இந்த வருமானத்தை ஈட்டியுள்ளது.