சிறையில் உள்ள 17 LTTE சந்தேகநபர்களை விடுதலை செய்ய பரிந்துரை

சிறையில் உள்ள 17 LTTE சந்தேகநபர்களை விடுதலை செய்ய பரிந்துரை

சிறையில் உள்ள 17 LTTE சந்தேகநபர்களை விடுதலை செய்ய பரிந்துரை

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2021 | 6:37 pm

Colombo (News 1st) நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள LTTE சந்தேகநபர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

விடுதலை செய்யக்கூடிய 17 சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.

பொசன் பூரணையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், ஜனாதிபதியின் தீர்மானம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியின் தீர்மானம் நாளை தமக்கு கிடைக்கும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்