கியூபாவின் அப்தலா கொரோனா தடுப்பூசி 92.28% பயனளிப்பதாக அறிவிப்பு

கியூபாவின் அப்தலா கொரோனா தடுப்பூசி 92.28% பயனளிப்பதாக அறிவிப்பு

கியூபாவின் அப்தலா கொரோனா தடுப்பூசி 92.28% பயனளிப்பதாக அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2021 | 4:51 pm

Colombo (News 1st) அப்தலா (Abdala) தடுப்பூசி கொரோனா வைரஸிற்கு எதிராக 92.28% பயனளிப்பதாக கியூபா தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Soberana தடுப்பூசி குறித்த அறிவிப்பை கியூபா வெளியிட்டது.

இதில் மூன்று டோஸ்களைக் கொண்ட Soberana தடுப்பூசி தனது இரண்டு டோஸ்களிலேயே கொரோனா வைரஸிற்கு எதிராக 62% பலனளிப்பதாக கியூபா தெரிவித்தது

இந்த நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றொரு தடுப்பூசியான அப்தலா தடுப்பூசி குறித்த விபரத்தை கியூபா வெளியிட்டுள்ளது.

அப்தலா கொரோனா தடுப்பூசி மூன்று டோஸ்களைக் கொண்டது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் அப்தலா வைரஸ் கொரோனா வைரஸிற்கு எதிராக 92.28% பலனளிக்கிறது என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கியூப அதிபர் Miguel Diaz-Canel கூறும்போது, “Finlay Institute, Center for Genetic Engineering மற்றும் Biotechnology மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் பல தடைகளுக்கு இடையே இரண்டு பயனுள்ள கொரோனா தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வரவுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினா, மெக்சிகோ, வியட்நாம், வெனிசுலா ஆகிய நாடுகள் கியூபாவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்