எரிபொருள் விலை அதிகரிப்பு ; நிவாரணம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பம்

எரிபொருள் விலை அதிகரிப்பு ; நிவாரணம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பம்

எரிபொருள் விலை அதிகரிப்பு ; நிவாரணம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2021 | 9:32 am

Colombo (News 1st) எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாது பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விடயத்துடன் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீனவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மண்ணெண்ணெய்க்கு 7 ரூபா வரை நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாவாக அதிகரிப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்காக அதனை 70 ரூபாவிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான இறுதி தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்