எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2021 | 10:35 am

Colombo (News 1st) எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (23) சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதாதைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சியினர் சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புக்கு மத்தியில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தனது உரையை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்