இரு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

இரு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

இரு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2021 | 5:08 pm

Colombo (News 1st) முதல் கொரோனா தடுப்பூசியாக Astrazeneca-வின் Covishield தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், இரண்டாவது டோஸாக Moderna தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார்.

66 வயதான ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஏப்ரல் மாதம் Covishield தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். இந்த நிலையில், இரண்டாவது டோஸாக Moderna தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் Covishield தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு இரத்த உறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக, அங்கு 60 வயதைக் கடந்தவர்களுக்கு Covishield தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், முதல் டோஸாக Covishield தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸாக வேறு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று ஜெர்மனி அரசு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, தற்போது Moderna தடுப்பூசியை மெர்க்கல் போட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்