2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2021 | 11:59 am

Colombo (News 1t) 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, புதிய வாக்காளர்களின் தரவுகளை கிராம உத்தியோகத்தர் பெற்று ஆவணத்தை புதுப்பிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு செய்யப்படவுள்ளன.

எனினும், கொரோனா தொற்று நிலையால் எதிர்பார்க்குமளவில் ஆகஸ்ட் மாதம் இதற்கான பணிகளை பூர்த்தி செய்ய முடியாது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்