விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் 10 நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் 10 நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் 10 நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2021 | 11:02 am

Colombo (News 1st) விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் 10 புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த கண்காணிப்பு கருவிகளை ஜெர்மனியிலிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டார்.

நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டதன் பின்னர் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்து ஏற்படக்கூடிய அதிர்வுகளை முன்னரைவிட சிறப்பான முறையில் கண்காணிக்க முடியும் என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படுகின்ற நிலைமையின் பிரகாரம் நில அதிர்வுகளுக்கான அளவை துல்லியமாக கணிக்க முடியாத நிலையுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹாகனதராவ, பல்லெகல, புத்தங்கல மற்றும் ஹக்மன ஆகிய பகுதிகளில் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த நாட்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்