வாவி துப்புரவுப் பணியில் சீன இராணுவமா: நடப்பது என்ன?

வாவி துப்புரவுப் பணியில் சீன இராணுவமா: நடப்பது என்ன?

வாவி துப்புரவுப் பணியில் சீன இராணுவமா: நடப்பது என்ன?

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2021 | 9:50 pm

Colombo (News 1st) சீன  – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் வித்தியாசமான ஆடைகள் அணிந்த சிலர் கலந்துகொண்டிருந்ததை காண முடிந்தது.

சீன மக்கள் விடுதலை இராணுவம் பயன்படுத்துகின்ற சீருடையுடன் இந்த ஆடைகளை ஒப்பிட்டுக் கூற முடியும்.

அமெரிக்க இராணுவம் இலங்கையில் கால்தடம் பதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய MCC உடன்படிக்கை மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரத்து செய்யப்பட்டது.

எனினும், தென் பகுதியில் இத்தகைய சீருடையினை அணிந்த வௌிநாட்டவர்களை வேலைத் தளங்களில் காண முடிகிறது.

திஸ்ஸமகாராமய வாவியில் சிவில் பணிகளே ஆரம்பமாகியுள்ளன.

நிலைமை அவ்வாறிருக்கும் போது, இராணுவ சீருடையினை ஒத்த ஆடையினை அணிந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள் யார்?

நடப்பது என்ன?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்