Colombo (News 1st) இன்று (22) காலை முதல் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேருபுர கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஶ்ரீ ஆனந்தாராம வீதி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கொடகவெல பொலிஸ் பிரிவின் கீழுள்ள கொட்டவல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கெரங்கபொக்குன ஜோர்ச் வீதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
