X-Press Pearl: வெளிநாட்டு நிபுணர் குழு – தேசிய கட்டட ஆய்வு நிறுவக அதிகாரிகள் இடையே சந்திப்பு

X-Press Pearl: வெளிநாட்டு நிபுணர் குழு – தேசிய கட்டட ஆய்வு நிறுவக அதிகாரிகள் இடையே சந்திப்பு

X-Press Pearl: வெளிநாட்டு நிபுணர் குழு – தேசிய கட்டட ஆய்வு நிறுவக அதிகாரிகள் இடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2021 | 2:48 pm

Colombo (News 1st) X-Press Pearl கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விசாரணைகளுக்காக நாட்டை வந்தடைந்த வௌிநாட்டு விசேட குழு, இன்று (21) தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அதிகாரிகளை சந்தித்தது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பிரதான காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, கப்பலில் இருந்து வௌியேறிய புகையினால் நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் வளிமாசு கட்டுப்பாட்டு பிரிவினால் கடந்த நாட்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டதுடன் பகுப்பாய்வு அறிக்கையை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால், கடற்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு நிபுணர் குழு நேற்று (20) ஆய்வுகளை ஆரம்பித்தது.

பிரான்ஸை சேர்ந்த இருவரும் இத்தாலியைச் சேர்ந்த ஒருவரும் சுவிட்சலாந்தைச் சேர்ந்த ஒருவரும் குறித்த விசேட நிபுணர் குழுவில் அடங்குகின்றனர்.

இவர்களுடன் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் தொடர்பான நிகழ்வுகளுக்கான இணைப்பதிகாரியொருவரும் உள்ளமை விசேட அம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்