சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படாது - மஹிந்த அமரவீர

by Staff Writer 21-06-2021 | 12:47 PM
Colombo (News 1st) சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்கக்கூடாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட மாற்றுத்திட்டம், இன்று (21)  அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உபகுழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் விலையை அதிகரிக்காதிருப்பதற்கு இது குறித்து நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது.