சீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு COVID தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

சீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு COVID தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

சீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு COVID தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

21 Jun, 2021 | 4:31 pm

Colombo (News 1st) சீனாவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு COVID தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகவுள்ளது.

சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாகவே ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும், இலவசமாக முட்டைகளை வழங்குவது, டெல்டா திரிபு பரவும் ஆபத்து ஆகியவற்றால் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் வேகம் அதிகரித்தது.

சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாகும்.

ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் வழங்குவதை சீன அதிகாரிகள் இலக்காகக் கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்