எரிவாயு விலை தொடர்பில் இன்று (21) பேச்சுவார்த்தை

எரிவாயு விலை தொடர்பில் இன்று (21) பேச்சுவார்த்தை

எரிவாயு விலை தொடர்பில் இன்று (21) பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2021 | 8:26 am

Colombo (News 1st) எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று (21) காலை கூடவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் லாப்F மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அமைச்சரவை உபகுழு கூடுகின்றனது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்