அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும் என அறிவிப்பு

அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும் என அறிவிப்பு

அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும் என அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

21 Jun, 2021 | 5:15 pm

Colombo (News 1st) அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பணிக்கு அழைக்க வேண்டும் என நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (21) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

வீடுகளில் இருந்து பணியாற்றும் சாத்தியம் இல்லாவிட்டால் மாத்திரம், அத்தியாவசிய சேவைகளின் கீழ் வராத அரச நிறுவனங்களின் ஊழியர்களை வாரத்திற்கு இரு முறை மட்டும் பணிக்கு அழைக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நிறுவனங்கள் பணிக்கு வரும் தமது ஊழியர்களுக்கு சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் பொதுப்போக்குவரத்து சேவையானது அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்