Colombo (News 1st) நாட்டில் மேலும் 47 கொரோனா மரணங்கள் இன்று (20) உறுதிப்படுத்தப்பட்டன.
உயிரிழந்தவர்களில் 27 ஆண்களும் 20 பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக பிழையான தரவுகளை வழங்கியவர் மீது ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென ஔடதங்கள் தயாரிப்பு விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
நாட்டில் நூற்றுக்கு மூன்று, நான்கு வீதமான சதிகாரர்கள், நாசக்காரர்கள் இருக்கின்றனர். அந்த நூற்றுக்கு மூன்று நான்கு வீதமானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புடன் பதவிகளுக்கு வரும் போது, சில நேரங்களில் எண்களை மாற்றுவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என நினைத்து பணியாற்றியதாக இருக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் கூறினார். இது தொடர்பாக எதிர்காலத்தில் ஒழுங்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தவறிழைத்ததாக நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க எதிர்பார்க்கின்றோம்
என அவர் கூறினார்.
இதனிடையே, நோய் குறித்த தரவுகளுடன் தொடர்புடைய சதிக்குற்றச்சாட்டு தொடர்பில் மருத்துவ சங்கம் கருத்துத் தெரிவித்தது.
அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லன பின்வருமாறு தெரிவித்தார்,
இது சூழ்ச்சி சேர் என COVID குழுவில் ஒருவர் கூறினார். மறுநாள் சூழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. சதிகாரரே, சதி என கூறினார். அனில் ஜாசிங்கவை இரண்டு மாதங்கள் வீட்டிற்கு அனுப்பினர். பின்னர், இரண்டு மாத இடைவௌியில் பலிக்கு எவரையேனும் தேடுகின்றனர். இறுதிப் பலியே, தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர. இங்கு, உலகத்துடனான தரவுக் கடத்தல் உள்ளது. தரவுகளைத் திருடி எமது தொழிற்சங்கம் விற்கின்றது. சதியில் ஈடுபட்டது யார்? சர்வதேச தரவுக் கடத்தல். விற்க முடியும். இந்தத் தரவுகள் சுதத் சமரவீரவிடம் இருந்தபோது தமக்கு வழங்குமாறு தொழிற்சங்கம் கோரியது. அவர் வழங்கவில்லை. வழங்காமைக்கான பிரதிபலனையே இன்று அவர் அனுபவிக்கின்றார். இந்த நாட்டின் மக்கள் உயிரிழப்பார்களாயின், அதனை தடுப்பதற்கு ஏதேனும் வேலைத்திட்டமொன்று இருக்க வேண்டும். அவ்வாறன்றி, சதிகாரர்கள் சதிகாரர்கள் எனக் கூறி பிரச்சினையைத் தீர்க்க முடியாது.