சந்தேகநபர்களின் தொலைபேசி இலக்கங்களை ஆராய அனுமதி

ஹெரோயின் வியாபாரம்: சந்தேகநபர்களின் தொலைபேசி இலக்கங்களை ஆராய நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 20-06-2021 | 12:14 PM
Colombo (News 1st) 53 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 52 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் தொலைபேசி இலக்கங்களை ஆராய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காலி நீதவான் ஹர்ஷன கெக்குனவெல முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்ப்படுத்திய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் மூவரையும் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். தடுத்துவைக்கப்பட்ட மூவரில் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் இன்ஸ்பெக்டரும் அடங்குகின்றார். பொலிஸ் சீருடையுடன் காரில் ஹெரோயினை கொண்டுசென்ற சந்தர்ப்பத்திலேயே, பத்தேகம பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்