கொரோனா தொற்று பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக தடைப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன. தற்போது அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 21 ஆம் திகதி முதல் அதிகபட்சம் 100 பேருடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.