சீனாவால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

இலங்கையின் திட்டங்களில் சீனா பங்கேற்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: இந்திய கடற்படை துணைத் தலைவர் தெரிவிப்பு

by Staff Writer 20-06-2021 | 10:52 PM
Colombo (News 1st) இலங்கை திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் அசோக் குமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய கடல் எல்லைகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், சீனாவுடன் பதற்றம் நிலவுவதால், அமெரிக்காவின் Predator வகை ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது என செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் அசோக் குமார் தெரிவித்ததாக “த ஹிந்து” செய்தி வௌியிட்டுள்ளது. Predator வகை விமானங்கள் 50,000 அடி உயரத்தில் 2,900 கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கும் திறன் கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆளில்லா விமானங்களில் ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரவித்துள்ள அவர், இதன் மூலம் எதிரிகளின் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வானில் மர்மப் பொருளொன்று பறக்கின்றமை வாதூவ பகுதியில் கண்காணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.