குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேருக்கு சிவப்பு அறிவித்தல் 

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேருக்கு சிவப்பு அறிவித்தல் 

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேருக்கு சிவப்பு அறிவித்தல் 

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2021 | 8:29 am

Colombo (News 1st) வௌிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள 24 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

சிவப்பு அறிவித்தலுக்கு அமைய, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளார், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் 13 பேர் தொடர்பிலேயே தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 11 பேர் வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளார் குறிப்பிட்டார்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஏனைய சிலருடன் மொத்தமாக 24 பேர் வௌிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளார், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்