இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபை கடன்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபை கடன்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபை கடன்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2021 | 11:44 am

Colombo (News 1st) எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் இலங்கை மின்சார சபை, நிலுவையிலுள்ள 8,000 கோடி ரூபா கடனை செலுத்த வேண்டும் என  இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

2019 மார்ச் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பெற்றுக்கொண்ட எரிபொருளுக்காக இந்த கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலையால், இலங்கை மின்சார சபைக்கு மின்னுற்பத்திக்கான செலவு குறைவடைந்துள்ளது.

இதனால் தமக்கு கிடைத்துள்ள இலாபத்தில் கடன் நிலுவையை செலுத்தும் பட்சத்தில், கூட்டுத்தாபனம் எதிர்நோக்கும் நிதிப் பற்றாக்குறை பிரச்சினையை ஓரளவுக்கேனும் தீர்க்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்